Print this page

அவருக்கே டி.என்.ஏ ஆதரவளிக்கும் 

தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தாம் ஆதரவளிப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சர்வதேசம் வழங்கும் உத்தரவாதத்துக்கு அமைவாக யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தீர்மானிப்போம் என தெரிவித்த அவர், இந்த உத்தரவாதத்தை எந்த நாடு வழங்கும் என்பது கேள்விக்குறியான விடயம் என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக இந்தியாஇலங்கை ஒப்பந்தத்தை கூட சரியான முறையில் நடைமுறைப்படுத்தாத இவர்கள், தேர்தலின் பின்னர் வழங்கப்பட்ட உத்தரவாதத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது